இந்தியாவில் அதிகம் விற்கும், ஏற்றுமதியாகும் பைக் எது தெரியுமா?

இந்தியாவில் அதிகம் விற்கும், ஏற்றுமதியாகும் பைக் எது தெரியுமா?
Post By : Admin Posted on 23-05-2017

குட்ஸ் சர்வீஸ் டாக்ஸ், வொர்ஸ்ட் சர்வீஸ் டாக்ஸ் என கன்னாபின்னாவென வரிகளைப் போட்டு டூவீலர்களின் விலையை ஏற்றினாலும், பைக் விற்பனையை அடித்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் பைக்குகளின் விற்பனை குட்டிக் குட்டி சதவிகிதங்களில் ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே விற்பனையில் ஹீரோதான் நம்பர் ஒன். கடந்த சில ஆண்டுகளாக சேல்ஸ் சார்ட்டில் முதல் இடத்தைப் பிடித்துவருகிறது ஹீரோ. நீங்கள் நினைப்பது சரிதான். இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரே பைக், ஹீரோவின் ஸ்ப்ளெண்டர்தான்.


ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஸ்ப்ளெண்டர்கள் விற்பனையாகின்றன.  ஸ்கூட்டரில் கில்லி என்றால், ஆக்டிவா. இதற்குப் பிறகு எப்போதுமே ஹீரோ ஸ்ப்ளெண்டர்தான் நிலையான இடத்தைப் பிடித்துள்ளது. `ஹோண்டா இல்லைன்னா ஹீரோவோட கதி அவ்ளோதான். ஹோண்டா இன்ஜினால்தான் ஸ்ப்ளெண்டர் இவ்ளோ விக்குது' என்று ஆரம்பத்தில் விமர்சனங்கள் வந்தன. 


இதன் காரணமாகவே ஹீரோவுக்குக் கோபம் வந்ததோ என்னவோ... `ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர்', `ஹீரோ ஸ்ப்ளெண்டர்' ஆனது. அதாவது, ஹோண்டாவிலிருந்து விலகி வெறும் ஹீரோ ஆனது. ஜெய்ப்பூரில் உள்ள தனது CIT (Centre of Innovation Technology) சென்டரில் சொந்தமாகவே இன்ஜின் தயாரித்து தனது பைக்குகளில் பொருத்தி விற்பனைக்கு இறக்கியது ஹீரோ. இப்போது விற்பனையாகும் i-ஸ்மார்ட், அச்சீவர், கிளாமர் போன்ற ஹீரோ பைக்குகளில் உள்ள இன்ஜின், ஹீரோவின் சொந்த தயாரிப்பே! இனி வரும் ஹீரோ பைக்குகளிலும் அப்படியே! `ஆனால், இதற்கான விதை, ஹோண்டா போட்டது' என்றும் கமென்ட் செய்கிறார்கள். 


ஆக்டிவா - 3,12,632, ஸ்ப்ளெண்டர் - 2,26,681, ஹீரோ HF டீலக்ஸ் - 1,43,794, ஹோண்டா சிபி ஷைன் - 1,0824, ஹீரோ பேஷன் - 80,053... இதுதான் சென்ற மாதத்தில் விற்பனையான பைக்குகளின் எண்ணிக்கை. 
ந்தியாவில் கல்லா கட்டும் பைக் ஹீரோ என்றால், ஏற்றுமதி விஷயத்தில் பஜாஜ் முன்னிலையில் இருக்கிறது. ஆம்! இந்தியாவிலேயே அதிகம் ஏற்றுமதியாகும் பைக், பஜாஜின் பாக்ஸர். முரண்பாடான ஒரு விஷயம், `இந்தியாவில் பாக்ஸர் பைக் விற்பனைக்கு இல்லை' என போர்டு மாட்டிவிட்டது பஜாஜ். ‘எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே’ என நினைத்தால், கரெக்ட்... பாக்ஸர், 1990-ம் ஆண்டுகளின் பைக். புதிதாக ரீ-மேக் ஆகி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு 150 சிசி-யில் லான்ச் ஆனது பாக்ஸர். சிலருக்கு சோதனை பக்கத்திலேயே தொட்டில் கட்டி ஆடும். பஜாஜுக்கும் அப்படித்தான். பாக்ஸர் நாக் அவுட் ஆனது. 


மனம் தளராத விக்ரமாதித்யன் மாதிரி திரும்பவும் களத்தில் இறங்கியது பஜாஜ். கடந்த 2012-ம் ஆண்டு பாக்ஸர் 150 சிசி-யின் விற்பனையை மொத்தமாக நிறுத்திவிட்டு, அடுத்த நான்கு ஆண்டுகளில் CT100 பைக்கை மீண்டும் அறிமுகப்படுத்தியது. பாக்ஸர்போல ஏமாற்றவில்லை CT100. 'பாக்ஸர்களின் விற்பனையை மொத்தமாக நிறுத்திவிட்டோம்; பேசாமல் பாக்ஸரை ஏற்றுமதி செய்தால் என்ன?' என்று பஜாஜுக்கு ஒரு யோசனை. அந்த ஐடியா செம க்ளிக்! Newsletter Subscription

Join the community that is committed to making a difference in the world we share.

Post AD