ஜிஎஸ்டி - எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?

ஜிஎஸ்டி - எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?
Post By : Admin Posted on 19-05-2017

நாடு முழுவதும் ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜிஎஸ்டி புதிய வரி சட்டத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவும் வரி விதிக்கப்பட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை எடுத்துள்ளது.

ஜிஎஸ்டியை அமல்படுத்துவது தொடர்பாக, ஜம்முவில் நடந்த கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரிவிதிப்பு 4 பிரிவுகளின் கீழே பிரிக்கப்பட்டுள்ளன. 5,% 12%, 18%, 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே வரிகள் விதிக்கப்பட உள்ளன.

5 சதவிகிதம் வரி!

மீன் பொருட்கள், க்ரீம், பதப்படுத்தப்பட்ட பால் பவுடர், பிராண்டட் பன்னீர், உலர் காய்கறிகள், காபி, டீ, மசாலா பொருட்கள், பீசா பிரட், ரஸ்க், ஜவ்வரிசி, மண்ணெண்ணைய், நிலக்கரி, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், படகுகளில் உயிர் காக்கும் சாதனங்கள்.

12 சதவிகிதம் வரி!

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், வெண்ணை, பாலாடை, நெய், பேக் செய்யப்பட்ட உலர் பழங்கள், மிருக கொழுப்புக்கள், பழச்சாறுகள், நாய் உணவுகள், ஆயுர்வேத மருந்துகள், பல்பொடி, அகர்பத்தி, வண்ணப் பயிற்சி புத்தகங்கள், படங்களுடனான புத்தகங்கள், குடை, தையல் மிஷின், மொபைல் போன்கள்.

18 சதவிகிதம் வரி!

பெரும்பாலான பொருட்கள் இந்த பிரிவின் கீழே வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, கார்ன்பிளக்ஸ், கேக் வகைகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜாம், சாஸ், சூப் வகைகள், ஐஸ்க்ரீம், துரித உணவு மசாலாக்கள், மினரல் வாட்டர், டிஸ்யூ பேப்பர்கள், என்வலப் கவர்கள், நோட்கள், இரும்பு பொருட்கள், மின்சாதன பொருட்கள், கேமிரா, ஸ்பீக்கர்கள், மானிட்டர்கள்.

28 சதவிகிதம் வரி!

சூயிங்கம், மொலாசஸ், கொக்கோ சேர்க்கப்பட்டாத சாக்லேட்கள், சாக்லேட் உடனான மொறு மொறுப்பு உணவுகள், பான் மசாலா, சோடா போன்ற நுரைதன்மை கொண்ட பானங்கள், பெயிண்ட், டியோடரன்ட், ஷேவிங் க்ரீம், ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், ஷாம்பூ, டை, சன்ஸ்க்ரீன், வால்பேப்பர், செராமிக் டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், டிஸ்வாசர், வெயிட் மிஷின்கள், வாஷிங் மிஷின், ஏடிஎம், வென்டிங் மிஷின்கள், வாக்யூம் க்ளீனர், ஷேவிங் பொருட்கள், ஹேர் க்ளிப்பர்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள், தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், சிறிய ரக படகுகள்.

வரியில்லா பொருட்கள்!

இறைச்சி, மீன்கள், சிக்கன், முட்டை, பால், தயிர், மோர், தேன், பழங்கள், காய்கறிகள், மாவு வகைகள், பிரெட், கோயில் பிரசாதங்கள், உப்பு, குங்குமம், பொட்டு, தபால் தலைகள், முத்திரைத் தாள்கள், புத்தகங்கள், செய்திதாள்கள், வளையல்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை. பெரும்பாலான பொருட்கள் 18 சதவிகிதம் வரி என்ற பிரிவின் கீழே கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter Subscription

Join the community that is committed to making a difference in the world we share.

Post AD